அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2023 08:06
நத்தம், நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் ஊர் பெரிய மந்தையில் புரவிகள் கண்திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து நேற்று வாணவேடிக்கைகளோடு அடைக்கலம் காத்த அய்யனார் உள்ளிட்ட கன்னிமார், குதிரை, காளை,மதிலை சிலைகள் ஊர் மந்தையில் இருந்து புறப்பட்டு இருப்பிடம் சேர்ந்தது. இதில் ஊராட்சி தலைவர் சங்கீத பிரசாத் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆவிச்சிபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.