பதிவு செய்த நாள்
04
ஜூன்
2023
10:06
கருமத்தம்பட்டி: கரிச்சிபாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்டது கரிச்சிபாளையம் கிராமம். இங்குள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில்கள் பழமையானவை. கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் இங்கு நடந்தன. மேலும் விநாயகர், பாலமுருகன் மற்றும் நவ கிரகங்களுக்கு புதிய சன்னதிகள் அமைக்கப்பட்டன. தண்ணீர் தொட்டி அருகில் புதிதாக ராஜ கணபதி கோவில் கட்டப்பட்டது. கடந்த,31 ந்தேதி விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 1 ம்தேதி புனிதநீர் கலசங்கள் நிறுவப்பட்டு முதல் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. தெய்வங்களின் திருமேனிகள் மூலஸ்தானத்தில் நிறுவப்பட்டு, அஷ்டபந்தன மருந்து இடப்பட்டது. 2 ம்தேதி காலை இரண்டாம் கால ஹோமம் பூர்ணாகுதி முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 8:15 மணிக்கு, விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 8:30 மணிக்கு, ஸ்ரீ மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராயர்பாளையம் தர்மலிங்கம் தலைமையிலான ஸ்ரீ வேலவன் காவடி குழுவினரின் காவடியாட்டம் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.