மேலுார்: பட்டூரில் பட்டத்தரசி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது நேற்று கண்மாய்பட்டி மந்தையில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள பட்டூர் மந்தைக்கு புரவிகள் மற்றும் நேர்த்திக்கடன் சிலைகள் கொண்டு வரப்பட்டது. இன்று (ஜூன் 4) பட்டூர் மந்தையில் இருந்து தனக்கம்பட்டி சின்ன அய்யனார். ஆலம்பட்டி பெரிய அய்யனார், பட்டூர் பட்டத்தரசி அம்மன் கோயில்களுக்கு புரவிகள் மற்றும் நேர்த்திக்கடன் சிலைகள் கொண்டு செல்லப்படுகிறது. இத் திருவிழாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா கொண்டாடுவது குறிப்பிடதக்கது.