பதிவு செய்த நாள்
05
ஜூன்
2023
12:06
விழுப்புரம்; விழுப்புரத்தில், காஞ்சி சங்கராச்சாரியார் சிலை வீதியுலா நடந்தது.
விழுப்புரம் சங்கர மடத்தில், காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 130ம் ஆண்டு ஜெயந்தி விழா, கடந்த 26ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, விழுப்புரம் வேத ஸம்ரக்ஷண டிரஸ்ட் சார்பில், தினமும் சிறப்பு ேஹாமம் நடக்கிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில், நேற்று முன்தினம் காலை கோ-பூஜை, மஹா ருத்ர ஏகாதசினி ேஹாமம் நடந்தது. தொடர்ந்து பரனுார் கிருஷ்ண பிரேமி அண்ணா முன்னிலையில், பூர்ணாஹூதி, உபன்யாசம் நடந்தது. மாலை 6: 00 மணிக்கு காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உருவச் சிலை வீதியுலா நடந்தது. விழுப்புரம் சங்கர மடத்தின் மேலாளர் ராமமூர்த்தி, சிவதியாகராஜன், சூரிய நாராயணன் மற்றும் நிர்வாக குழுவினர் பங்கேற்றனர்.