ஒருமுறை தோழர்களிடம் பேசியபோது அபூபக்கர் என்பவர் திடீரென அழுதார். ‘ஏன் அழுகிறீர்கள்’ என மற்றொரு தோழர் கேட்டார். ‘‘நபிகள் நாயகத்துடன் நான் இருந்திருக்கிறேன். அவர் தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல், பிறருக்கு கொடுத்துவிடுவார். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்’ என கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது’’ என்றார். அவர்களும் ஆர்வத்துடன் கேட்டனர். அவரும் சொல்ல ஆரம்பித்தார். நல்ல செயலை செய்தால் பரிசும், கெட்ட செயலை செய்தால் தண்டனையும் மறுமையில் உண்டு. நன்மை தராத செயலைச் செய்தால் விசாரணையுண்டு. மனிதர்கள் மறுமையை உறுதியாக நம்பினாலும், இந்த பிறவியில் செல்வம் தேடுவதிலேயே வாழ்க்கையை கழிக்கிறார்கள். இவர்களின் செயலை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது என்றார்.