* சிறிய செயலாக இருந்தாலும் அதை தொடர்ந்து செய்யுங்கள். * நீங்கள் செய்த நன்மையை சிந்திப்பதை விட, செய்த பாவங்களை சிந்தியுங்கள். * உங்கள் கண் முன் நடக்கும் தீமைகளை தடுத்து நிறுத்துங்கள். * எவர் பண்பை இழந்துவிடுகிறாரோ அவர் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுகிறார். * உங்களிடம் உள்ள செல்வங்களை இறைவன் பார்ப்பதில்லை. செயல்களை மட்டுமே பார்க்கிறான். * பிறருக்கு உதவி செய்ய விரும்பினால்கூட, அதற்கு நன்மை பதிவு செய்யப்படும். * பிறருக்கு கடன் கொடுத்து உதவுவதும் தர்மம். * நல்ல மனதுடன் செய்யும் சிறிய செயல்கூட பெரியதாக மாறிவிடும். * உங்களிடம் பணம் உள்ளபோதே தர்மம் செய்துவிடுங்கள். * தவறு செய்பவரை நல்லதைச் சொல்லிக்கொடுத்து அவரை திருத்துங்கள். * பார்வை இல்லாதவர்களுக்கு வழிகாட்டுங்கள். * எந்தவொரு பிரச்னையையும் சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள். – பொன்மொழிகள்