மரம் நேராக வளர்வதற்கு அதன் பக்கவாட்டில் முளைத்திருக்கும் கொப்புகளை வெட்டிவிட்டால் போதும். அது போல தான் குழந்தைகளின் மனதும். நல்ல பள்ளிக்கூடத்தில் தான் அவர்களை சேர்த்து இருக்கிறோம் என பெற்றோர்கள் நினைக்காமல், அவர்களிடம் பள்ளியில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் விசாரியுங்கள். அப்போது தான் தேவையற்ற எண்ணங்கள் அவர்களிடம் இருந்தால் அவற்றை களைய முடியும். அவர்களும் எதிர் காலத்தில் நேர்மையான பாதையில் செல்வர்.