மந்திராலய மகானான குரு ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஜீவசமாதி அடைய தயாரானார். அதற்கு முன்பாக அப்பண்ணாச்சாரியார் என்னும் சீடர் வெளியூருக்குச் சென்றிருந்தார். திரும்பும் போது குருநாதர் சமாதியில் அமரப் போகும் செய்தியை கேள்விப்பட்டு பதட்டம் அடைந்தார். வரும் வழியில் துங்கபத்திரா ஆற்றில் வெள்ளம் குறுக்கிட்டது. கரையில் நி்ன்றபடி, ‘ஸ்ரீ பூர்ணபோத குருதீர்த்த...’’ என்னும் பாடலை பாடினார். அவரது பக்திக்கு கட்டுப்பட்ட நதி, இரண்டாக பிளந்தது. பிருந்தாவனத்தை சீடர் அடைந்த போது, குருநாதரின் சமாதியை கற்பலகையால் மூடிக் கொண்டிருந்தனர் பக்தர்கள். மீண்டும் இந்த பாடலை பாட குருநாதர் காட்சியளித்தார். தினமும் உச்சிக்கால பூஜையில் ராகவேந்திரரின் பிருந்தாவனத்தில் இப்பாடலை பாடுகின்றனர்.