வாடிப்பட்டி பால தண்டாயுதபாணி கோயிலில் பூப்பல்லக்கில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2023 04:06
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தர்மராஜன் கோட்டை பால தண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன் 2ல் பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து, பூக்குழி இறங்கி சுவாமிக்கு பாலபிஷேக வழிபாடு செய்தனர். ஜூன் 3 பட்டுப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார். நேற்று இரவு பூப்பல்லக்கில் சுவாமி ராஜ அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் உலா வந்தார். தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள், சீர் பாதம் தாங்கிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.