ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேட்டு சோழந்தூர் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வரர், விநாயகர் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், கோ பூஜையும் நடைபெற்று, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. நடைபெற்ற சிறப்பு தீப ஆராதனையில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.