பெ.நா.பாளையம்; சின்னதடாகம் அருகே வீரபாண்டி கிராமத்தில் சக்திவேல் முருகன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை ஒட்டி முளைப்பாலிகை மற்றும் தீர்த்த குடங்கள் விநாயகர் கோயில் வளாகத்தில் இருந்து எடுத்து வருதல், திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, திருமகள் வழிபாடு, புற்றுக்கண் வழிபாடு உள்ள நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, முருக பெருமானுக்கு முதல் கால வேள்வி, பூஜைகள், பேரொளி வழிபாடு, திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, திருமுறை விண்ணப்பம் நடந்தது. பின்னர் கலசத்துக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் விழா நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.