ராமேஸ்வரம் கோயிலில் ஜப்பான் பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2023 10:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் 37 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்தவர் மஜித்யா அயோமா(எ) தீபக். இவர் ஹிந்து மதத்தை தழுவி உள்ளார். இவர் தனது உறவினர்கள், நண்பர்கள் 36 பேருடன் இந்தியாவில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஜூன் 2ல் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு ஜூன் 4ல் சென்னை வந்திறங்கினார். பின் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். இங்கு நடந்த சிறப்பு ருத்ரா, பாலாபிஷேகத்தில் ஜப்பான் பக்தர்கள் பங்கேற்று பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வந்து கட்டடக்கலையை கண்டு ரசித்தனர். இதையடுத்து உ.பி., யில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய டில்லி செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.