பதிவு செய்த நாள்
07
ஜூன்
2023
10:06
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அருங்குணம் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவிலில், 61-ம் ஆண்டு வைகாசி திருவிழா நடந்து வருகிறது. இத்திருவிழாவில், அம்மனுக்கு காப்பு கட்டுதல் விழா, நேற்று துவங்கியது. நேற்று, காலை கிராமத்துப் பெண்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, விரதமிருந்து தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதில், கிராம தேவதையான முத்துமாரியம்மனுக்கு, செல்லியம்மன் கோவிலில் இருந்து, 108 பால்குடம் எடுத்து வந்து, மேள தாளங்கள் முழங்க, முத்துமாரி அம்மனுக்கு அவர்களே பாலாபிஷேகம் செய்தனர். பின், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மதியம், கூழ்வார்த்தல் நிகழ்வும் நடந்தது. இரவு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முத்து மாரியம்மன் வீதி உலா வந்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.