ஒட்டப்பிடாரம் செல்லியாரம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2023 11:06
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கயத்தார், கொத்தாளி கிராமம், ஒட்டப்பிடாரம், செல்லியாரம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோயிலில் யாகசாலை பூஜை நிறைவு பெற்று மகா பூர்ணாகதி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடன்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து மேல வாத்தியங்கள் முழங்க விமான கலசத்தை அடைந்தது விமான கலசத்தில் புனித நீர் உற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் செல்லியாரம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.