மயிலாடுதுறை விஷ்ணு துர்க்கை நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2023 11:06
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குமாரக்குடி தெற்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு விஷ்ணு துர்க்கை நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா குமாரகுடி தெற்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு விஷ்ணு துர்க்கை நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு யாக சாலைகள் அமைத்து நேற்று முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று மகா பூர்ணாகதி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடன்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து மேல வாத்தியங்கள் முழங்க விமான கலசத்தை அடைந்தது விமான கலசத்தில் புனித நீர் உற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.