அலங்காநல்லூர்: மதுரை சத்திரப்பட்டி அருகே கல்லம்பட்டியில் சர்வயோக மஹா மங்கள வாராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 6ல் யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இன்று காலை 2ம் கால பூஜையை தொடர்ந்து பிரம்மஸ்ரீ செந்தில் குமார் அர்ச்சகர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மன், உன்மத்த பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.