பதிவு செய்த நாள்
07
ஜூன்
2023
04:06
கமுதி: கமுதி குண்டாறு பாலம் அருகே அமைந்துள்ள சக்தி பாபா கோயிலில் ஆதிவராஹி அம்மன் ,நரசிம்மர் நூதன விக்ரஹ பிரதிஷ்டை விழா நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் தொடங்கி புண்ணிய வசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை நடந்தது. பின்பு பூரணாஹூதி, தீபாராதனை நடந்தது. ஆதிவராஹி அம்மன், நரசிம்மர் சிலைக்கு கும்பநீர் அபிஷேகம், பால், சந்தனம்,பன்னீர் உட்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பூஜையில் கமுதி, கோட்டைமேடு, கண்ணார்பட்டி உட்பட பலரும் கலந்து கொண்டனர். விழா கமிட்டியாளர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி வீரபத்திர இந்துமதி உட்பட பலரும் செய்தனர்.