காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கோவிலூர் தென் சபாநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
சிதம்பரத்தில் உள்ளது போல், கோவிலூரில் தென் சபாநாயகர் கோயில் கட்டப்பட்டுள்ளது. மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் கோயில் கட்டும் பணியை செய்து வந்தார். அவருக்கு பிறக, ஆதினமாக பொறுப்பேற்றுள்ள நாராயண ஞான தேசிக சுவாமிகள் கோயில் திருப்பணியை முடித்து கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்தார். சபாநாயகர் கோயிலில் ஆனந்த நடராசர் மற்றும் சிவகாமசுந்தரி பஞ்சலோகத்தால் ஆன சிலை நிறுவப்பட்டுள்ளது. விழாவையொட்டி கடந்த ஜூன் 2 முதல் யாக சாலைகள் தொடர்ந்து நடந்தது. இன்று காலை கோவிந்தராஜ பெருமாள் கோயில் மற்றும் தென் சபாநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.