ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.68 கோடி உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2023 04:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ. 1.68 கோடி வருவாயாக கிடைத்தது. ராமேஸ்வரம் திருக்கோயிலில் 40 நாள்களுக்கு பின் நேற்று சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் கோயில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கோயில் ஊழியர்கள் சேகரித்தனர். இந்த காணிக்கையை கோயில் கல்யாண மண்டபத்தில் எண்ணினார்கள். இதில், ரொக்க பணம் ரூ. 1 கோடி 68 லட்சத்தி 54 ஆயிரத்து 912 ரூபாயும், தங்கம் 136 கிராம், வெள்ளி 6 கிலோ என வருவாயாக கிடைத்தது. இதனை கோயில் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் உள்ளிட்ட பலர் எண்ணினார்கள்.