பதிவு செய்த நாள்
08
ஜூன்
2023
04:06
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில், கும்பாபிஷேகம் இன்று காலை 11:35க்கு மணிக்கு நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் கும்பாபிஷேக விழாவானது, ஜூன் 5 ல் கணபதி ஹோமம், விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், பூர்ணாகுதி தீபாராதனைகளையும் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் நான்காம் கால யாகசாலை பூஜைகளும், சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த நிலையில், இன்று காலை 7:45 மணிக்கு, ஆறாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, நாடீ சந்தானம் ஆகிய பூஜைகளும், மகாபூர்ணாகுதி தீப ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைபெற்று, காலை 11:35 மணிக்கு கோவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் வெயிலுகந்த விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. முன்னதாக ராமநாதபுரம் சமஸ்தான ராணி சேதுபதி கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார் மற்றும் குடும்பத்தினருக்கு கோயில் திருப்பணி குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில், பரம்பரை அறங்காவலர் ஜமீன்தார் நாராயணன் செட்டியார், முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், கூட்டுறவு சங்க தலைவரும், முன்னாள் கிராம நிர்வாக அலுவலருமான கிருஷ்ணன், கடலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குஞ்சரம் கிருஷ்ணன், உப்பூர் செந்தில்குமார், முத்துக்குமார், ரவிக்குமார், உப்பூர் அ.தி.மு.க., கிளைச் செயலாளர் குமரையா அம்பலம், கணேசன் அம்பலம், உப்பூர் முத்துமாரி அம்பலம், கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி பாலன், துணைத் தலைவர் சேவியர், ஊராட்சி செயலாளர் அந்தோணி, மற்றும் மன்ற உறுப்பினர்களும், உப்பூர் மலர் ஹாஸ்பிடல் டாக்டர்கள் கிருபாகரன், மணிமொழி, கடலூர் செல்லத்துரை, இளங்கோவன், உரக்கடை மணிகண்டன், எல்.ஐ.சி., காப்பீட்டுக் கழக ஆலோசகர் செல்வராஜ் உட்பட தொழில் அதிபர்களும், அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்களும், சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.