விஜய கரிசல்குளம் காளியம்மன், துர்க்கையம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2023 05:06
சிவகாசி: சிவகாசி அருகே விஜய கரிசல்குளம் காளியம்மன், துர்க்கையம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா நடந்தது. ஜூன் 6 மாலையில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது அன்று மாலை கிராம சிறுவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முளைப்பாரி எடுத்து கும்மி பாடல் நிகழ்ச்சியும், காளியம்மன் துர்க்கையம்மன் கரகம் எடுத்து ஊரை சுற்றி ஊர்வலம் வந்தது. மறுநாள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு, கயிறு குத்துதல் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. சுவாமி சப்பரத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.