Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் பூ ... அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலசுப்பிரமணியர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2023
04:06

மேட்டுப்பாளையம்: சிறுமுகை பாலசுப்பிரமணியர் கோவிலில், மண்டல பூஜை நாளை காலை (11ம் தேதி) நிறைவு விழா நடைபெறுகிறது. சிறுமுகை பழத்தோட்டத்தில், பவானி ஆற்றின் கரையோரம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம், 24ம் தேதி நடந்தது. இதை அடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேக பூஜை செய்து வருகின்றனர். நாளை (11ம் தேதி) மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறுகிறது. காலை, 5:30 மணிக்கு நடை திறந்து, மங்கல இசை இசைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, 7:30 மணிக்கு சிறுமுகை மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இருந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, பாலசுப்பிரமணியருக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை, 9:00 மணிக்கு, 108 வலம்புரி சங்கு வழிபாடு சிறப்பு வேள்வி பூஜைகள் நடைபெற உள்ளன. கோவை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் ராமானந்தா குமரகுருபர சுவாமிகள், ஓதிமலை ஆதீனம் சிவனேச அடிகளார் ஆகியோர் பங்கேற்று, சிறப்பு பூஜைகளை செய்ய உள்ளனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிகள் குழுவினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar