ராஜபாளையம்: ராஜபாளையம் பழையபாளையம் யோகீஸ்வரர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட செல்வ காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
நான்கு நாட்கள் நடந்த விழாவில் முதல் நாளாக கடந்த வியாழக்கிழமை நேர்த்தி கடன் வேண்டிய பக்தர்கள் அக்னி சட்டி ஊர்வலம் எடுத்தும், மறுநாள் தீர்த்த குடம் பால்குடம் முளைப்பாரி ஊர்வலம் கோயில் வளாகத்தில் தொடங்கி காளியம்மன் கோயில் முத்தாலம்மன் கோயில்கள் வழியாக சுற்றிவந்து கோயிலை வந்தடைந்தது. சனிக்கிழமை பெண்கள் சிறுமிகள் ஊர்வலமாக முளைப்பாரியை கொண்டு சென்று அப்பாள் ராஜா ஊரணியில் கரைத்தனர். கடைசி நாளான இன்று அன்னதானம் நடைபெற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏற்பாடுகளை சமூக நிர்வாகிகள் சரவணன், முனீஸ்வரன், முத்துக்குமார் செய்திருந்தனர்.