கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அல்குத்புல் சுல்தான் செய்யது இபுராகீம் பாதுஷா நாயகம் தர்காவில் இன்று(ஜூன் 12) சந்தனக்கூடு மதநல்லிணக்க திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு மே 21 முதல் மவ்லீது (புகழ் மாலை) தொடர்ந்து ஓதப்படுகிறது. மே 31ல் கொடியேற்றம் நடந்தது. இன்று (ஜூன் 12) சந்தனக்கூடு விழாவிற்கு மாலை 4:30 மணிக்கு யானை, குதிரைகளுடன் ஊர்வலமாக சென்று தர்காவில் போர்வைஎடுக்கும் விழா நடக்கிறது. நாளை அதிகாலை 3:00 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இப்ராகீம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, மின்னொளியால் செய்யப்பட்ட அலங்கார ரதத்துடன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்படுகிறது. அதிகாலை 5:30 மணிக்கு தர்கா வந்தடையும், தர்காவை 3 முறை வலம்வந்த பின், சிறப்பு பிரார்த்தனையும், மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடை பெற உள்ளது. பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்தும் வரும் ஏராளமானோர் பங்கேற்பர். விழா ஏற்பாடுகளை ஏர்வாடி ஹக்தார் நிர்வாக சபையினர், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.