அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுார் ஊராட்சி, பொடாரம்பாளையத்தில் பொன்னர் சங்கர் உடுக்கை பாடல் நிகழ்ச்சி மாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 20 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி செல்லாண்டியம்மன் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரை குழந்தை இல்லாத தம்பதிகள் மற்றும் பக்தர்கள் பொடாரம்பாளையம் கன்னியாத்தாள் கோவிலில் இருந்து, மாரியம்மன் கோவில் திடலுக்கு இழுத்து சென்றனர். எம்.எல்.ஏ., விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் வேல் குமார் மற்றும் ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.