ராஜஸ்தான் மாநிலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஒரு சமயம் வெயிலின் கடுமையால் ‘லுா’ என்னும் வெப்பு நோய் தாக்கியது. இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நீண்ட, அடர்த்தியான தலைப்பாகையை மக்கள் அணிந்து கொண்டனர். அம்மாநிலத்திற்கு விவேகானந்தர் சென்ற போது, அவரை ‘லுா’ நோய் தாக்காமல் இருக்க ராஜஸ்தான் மன்னர் தலைப்பாகை கட்டிக் கொள்ளும்படி வேண்டினார். விவேகானந்தரும் ஆர்வத்தோடு தலைப்பாகை கட்டிக்கொண்டார். பின் அதுவே அவரின் அடையாளமாக மாறி விட்டது.