அசோகரின் தர்மச் சக்கரத்தின் கீழே ‘சத்யமேவ ஜயதே’ என எழுதப்பட்டிருக்கும். ‘வாய்மையே வெல்லும்’ என்பது இதன் பொருள். இது சரியான சொற்றொடரா என்றால்... இல்லை. ‘சத்யமேவ ஜயதி’ என்பதுதான் சரியான சொல். ஆனால் இனிமை கருதி சொற்கள், வார்த்தைகளை மாற்றிக் கொள்ள மகரிஷிகளுக்கு மட்டும் அனுமதி இருந்தது. இதை ‘ஆர்ஷப் பிரயோகம்’ என்பர். ‘சத்யமேவ ஜயதே’ என மகரிஷிகளின் வேதவாக்கை அப்படியே நாமும் பயன்படுத்துகிறோம்.