தன்னை விட தன் குழந்தை அறிவாளியாக இருக்க வேண்டும் என எல்லா தந்தையும் விரும்புவர். அதைப்போல் கடவுளான சிவபெருமானும் விரும்பினார் என்பதை முருகப்பெருமானின் வரலாறு உணர்த்துகிறது. அசுரர்களான தாரகன், சூரபத்மன் இருவரையும் அவர்களுக்கு கொடுத்த வரத்தின்படி தான் கொல்ல கூடாது என்பதால் முருகப்பெருமானை படைத்தார். ஓம் என்னும் மந்திரத்திற்கான விளக்கத்தையும் உபதேசமாக மகனிடமே கேட்டுப் பெற்றார். ‘புத்ராத் இத்தேச் பராஜயம்’ என்பார்கள். ‘தன் பிள்ளையிடத்தில் மட்டும் தோல்வியடைதல்’ என்பது இதன் பொருள். இதைத்தான் சிவபெருமான் செய்தார். இப்படி உத்தம அம்சங்களை கொண்டவராக முருகப்பெருமான் இருக்கிறார்.