பிறருக்கு உதவ வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்த நல்ல குணம் அமைவது நாம் செய்த புண்ணியம். பிறருக்கு உதவினால் அதற்கான நன்மை கிடைக்கும். இது இயற்கையின் விதி. ஆனால் பலரும் பிறருக்கு உதவி செய்துவிட்டு, பதிலுக்கு அவர்கள் செய்யவில்லை என புலம்புவர். இதனால் செய்த உதவியும் பலன் இன்றி போகிறது. பிறர் செய்த உதவியை மறக்காதீர்கள். ஆனால் நீங்கள் செய்த உதவியை மறந்துவிடுங்கள். இப்படி இருந்தால் மனம் லேசாகும்.