மனிதர்களில் பலரும் வெவ்வேறான கனவுகளை நோக்கி ஓடிக்கொண்டிருப்பர். அவற்றை நனவாக்க பலவிதமான முயற்சிகளை செய்வர். ஆனால் அதில் சிலர் தோல்விகளை சந்திக்கின்றனர். இவர்கள் ஒன்றை செய்யலாம். ‘என்னால் ஆன முயற்சிகளை எல்லாம் செய்துவிட்டேன். இனி முயற்சியில் வெற்றி பெறச்செய்வது உன் பொறுப்பு’ என இறைவனிடம் கேட்க வேண்டும். இவ்வாறு பொறுப்புகளை அவனிடம் ஒப்படைத்தால் நிம்மதியும் கிடைக்கும்.