ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ளது எமனேஸ்வரமுடையார் கோயில். முன்பொரு காலத்தில் எமதர்மர் தனது சாபத்தை போக்க இங்கு ஒரு சிவலிங்கத்தை அமைத்தார். இதனால் சுவாமி, ‘எமனேஸ்வரமுடையார்’ என பெயர் பெற்றார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் கால சம்ஹாரமூர்த்தியாக அருளும் சிவபெருமான், இங்கு அனுக்கிரமூர்த்தியாக இந்திர விமானத்தின் கீழ் உள்ளார். ஆயுள் விருத்தி பெறவும், சனிதோஷம் நீங்கவும் வேண்டிக்கொள்ளலாம். இங்கு ஆயுள் ஹோமம், அறுபது, எழுபது, எண்பதாம் திருமணம் செய்து கொண்டால் நீண்ட ஆயுளை பெறலாம். அம்பாள் சொர்ணகுஜாம்பிகையை வழிபட்டால் திருமணம், குழந்தை இல்லாதவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும்.