அண்ட சராசரங்களை காப்பவர்கள் சிவபெருமான், பார்வதி. இவர்களின் குழந்தைதான் முருகப்பெருமான். சிவ – சக்தி ஜோதியில் பிறந்த இவர் மகா தேஜஸ்வி. பரம பராக்கிரமசாலி. எவராலும் வெல்ல முடியாத சூரன். தாரகன் முதலான அசுரர்களை வெல்லவே தோன்றிய மகா சக்திமான். அதனால் இவரை ‘சக்திவேல்’ என்கிறோம். இப்படி பராக்கிரம சக்தியோடு, அருள், அறிவுச்சக்தியாக இருப்பதே இவருடைய விசேஷம். இதனால் இவர், ‘ஞான பண்டிதன்’, ‘ஞானஸ்கந்தன்’ என்றும் போற்றப்படுகிறார்.