கருப்பண்ண சுவாமி கோவிலில் கத்திமரம் ஏறி பூசாரி அருள்வாக்கு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2012 10:10
விழுப்புரம்: விழுப்புரம் சித்தேரிக்கரை பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவிலில் 16ம் ஆண்டு திருவிழா நடந்தது. விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 7.30 மணிக்கு கரகம் வீதியுலா நடந்தது. பிற்பகல் 3 மணிக்கு 21 அரிவாள்களுக்கு 108 அபிஷேகம், பால், சந்தன அபிஷேகங்கள் நடந்தது. மாலை 5 மணிக்கு வில்வ பூ, பச்சைமிளகாய், அருகம்புல் அபிஷேகங்களும், இரவு 7.30 மணிக்கு கருப்பண்ணசுவாமி அலங்காரத்துடன் பூசாரி பாஸ்கர், 31 அடி உயரத்தில் அரிவாளால் அமைக்கப்பட்ட படிகளில் ஏறி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். மாலை 5.30 மணிக்கு பச்சை வாழியம்மன், வள்ளியம்மை கோவிலில் தீமிதி விழாவும், இரவு 8 மணிக்கு விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி, அங்காளபரமேஸ்வரி சுவாமிகள் வீதியுலா நடந்தது.இன்று(1ம் தேதி) காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.