உலக நன்மைக்காக முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2023 10:06
திருப்பரங்குன்றம்; உலக நன்மை, மழை வேண்டியும், அனைத்து உயிரினங்களும் சுபிட்சம் பெறவும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் 1157 கி.மீ., பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் திருப்பரங்குன்றம் வந்தனர். பொன்னமராவதி வலையப்பட்டி பச்சை காவடி ஐயா தலைமையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 24 பக்தர்கள் பாதையாத்திரை குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் ஜூன் 7ல் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசனம் செய்து பாதயாத்திரையை துவக்கினர். திருப்பரங்குன்றம் வந்த அவர்கள் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் முடித்து இரவு மீண்டும் பாதயாத்திரை புறப்படுகின்றனர். திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை சென்று ஆக. 12ல் திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்து பாதயாத்திரையை நிறைவு செய்கின்றனர். பக்தர்கள் கூறுகையில், 67 நாட்கள் பாதயாத்திரையாக செல்கிறோம். இது போன்று கடந்த ஐந்து ஆண்டுகளாக பாதயாத்திரை சென்று வந்தோம். இது ஆறாவது ஆண்டு. எங்கள் குருநாதர் பச்சை காவடி ஐயா சுவாமி 12 ஆண்டுகளாக ராமேஸ்வரத்திலிருந்து காசி வரை பாதயாத்திரை சென்றுள்ளார் என்றனர்.