ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரி கிராமத்தில் உள்ளது ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகளவு வந்து சுவாமியை தரிசனம் செய்வர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்தது. கோவில் வெளியே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இரண்டு மணி நேரத்திற்கு பின் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., கணேஷ்குமார் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.