பதிவு செய்த நாள்
14
ஜூன்
2023
11:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், ஜீன காஞ்சி என அழைக்கப்படும் திருப்பருத்திக்குன்றத்தில், சமணர் தலமான திரைலோக்கியநாதர் ஜீன சுவாமி கோவில், 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கோவில், தமிழ்நாடு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த சமணர்கள், தினமும் இக்கோவிலில் வழிபடுகின்றனர். பல்வேறு சிறப்புக்களை பெற்ற இக்கோவில் ராஜகோபுரத்தில், அரச மர செடிகள் முளைத்து உள்ளன. இச்செடிகளின் வேர்களால், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாகி, கோபுரத்தின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே, சமணர்களின் அடையாள சின்னமாக விளங்கி வரும் திருப்பருத்திக்குன்றம் திரைலோக்கியநாதர் ஜீன சுவாமி கோவில் ராஜகோபுரத்தில், முளைத்து வரும் செடிகளை வேருடன் அழிக்க, தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.