பதிவு செய்த நாள்
14
ஜூன்
2023
11:06
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் ஜல்லிக்கொரை பகுதியில் மதுரை வீரன் பட்டத்து அரசி அம்மன் திருக்கோயிலில் தீப்பந்தம் கட்டி ஆடுதல் திருவிழா நடந்தது. இங்குள்ள மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் திருக்கோயிலில், 42ம் ஆண்டு வைகாசி திருக்கல்யாண பூச்சாட்டு திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி கணபதி ஹோமம், முனீஸ்வரர் பூஜை, பாலாஜி கார்டன் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து, 7 கன்னிமார் குழந்தைகள் தீர்த்த குடம் எடுத்து வருதல், மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் ஊர்வலம், அம்மன் அழைத்தல், திருக்கல்யாணம், கரகம், பூச்சட்டி, அலகு குத்துதல் ஆகியன நடந்தன. தொடர்ந்து, பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. மதுரை வீரனுக்கு சிறப்பு பூஜை, மாவிளக்கு எடுத்தல், மதுரை வீரனுக்கு தீப்பந்தம் கட்டி ஆடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.