பதிவு செய்த நாள்
14
ஜூன்
2023
04:06
அன்னூர்; வடக்கலூர், கருப்பராயசாமி கோவிலில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வடக்கலூரில், 200 ஆண்டுகள் பழமையான, கன்னிமார், தன்னாசியப்பன், கருப்பராயசாமி கோவிலில், பூச்சாட்டு திருவிழா கடந்த 30ம் தேதி துவங்கியது. தினமும் கருப்பராய சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று அதிகாலை 2:00 மணிக்கு அம்மை அழைத்தல் நடந்தது. காலை 7:00 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. காலை 11:00 மணிக்கு பெண்கள் ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பித்தனர். கருப்பராய சாமிக்கு, பால், தயிர், நெய், சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது, மதியம் 2:00 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. இதையடுத்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கருப்பராய சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை காலை 11:00 மணிக்கு சுவாமி திருவீதிஉலாவும், மஞ்சள் நீர் உற்சவமும் நடக்கிறது.