பதிவு செய்த நாள்
14
ஜூன்
2023
04:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மாதம் 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 9ல் இரவு வெட்டிவேர் சப்பரத்துடன் கொடி இறக்கப்பட்டு, வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து, விடையாற்றி உற்சவம் கடந்த 10ல் துவங்கியது. நிறைவு நாளான நேற்று, இரவு 7:30 மணிக்கு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. இதில், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், சன்னிதி தெரு, குறுக்கு தெரு, அண்ணா தெரு, நான்கு மாட வீதி, ஆணை கட்டி தெரு வழியாக வீதியுலா சென்று மீண்டும் சன்னிதி வந்தடைந்தார்.