காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு வெள்ளி குவலை காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2023 05:06
ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம், ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு கச்சிபௌலி - ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர் 2.கிலோ 400 கிராம் வெள்ளி குவலையை கோயிலுக்கு காணிக்கையாக கோயில் துணை நிர்வாக அதிகாரி ரவீந்திரபாபு இடம் வழங்கினார் . முன்னதாக இவர்களுக்கு கோயில் சார்பில் சிறப்பு சாமி தரிசனம் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்யப்பட்டது. கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர் .தொடர்ந்து இவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களும் சாமி படத்தையும் கோயில் சார்பில் வழங்கப்பட்டது.