திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் புதுச்சேரி தலைமை செயலாளர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2023 03:06
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் புதுச்சேரி தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். இன்று சனிஸ்வரபகவான் கோவிலுக்கு புதுச்சேரி தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா தனது குடும்பத்துடன் வருகைப்புரிந்தார். இவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் சிறப்பான வரவேற்பு அளித்தார். பின்னர் புதுச்சேரி தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஸ்ரீதார்பாரண்யேஸ்வரர், விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் மேற்கொண்டு, பின்னர் ஸ்ரீபிராணாம்பிகை. ஸ்ரீசனிஸ்வரபகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு தனது குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்.கலெக்டர் செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் புதுச்சேரி தலைமை செயலாருக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.