ஆறுமுகநேரி சிவன் கோயில் ஆனி உத்திர திருவிழா : ஐந்து சப்பரங்கள் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2023 12:06
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசவாமி கோயிலில் 5 சப்பரங்களின் பவனி நடந்தது. இக்கோயிலில் ஆனி உத்திரதிருவிழா நடந்து வருகிறது. இரண்டாவது நாள் திருவிழாவில் காலையாக பூஜையை தொடர்ந்து சுவாமி, அம்பாள் பூஞ்சப்பர பவனி நடந்தது. இரவு 5 சப்பரங்களின் அணிவகுப்பு நடந்தது. இதில் விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சோமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளல் நடந்தது. இந்த 5 சப்பரங்களின் பவனியை சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்தசெயல் உதவி தலைவர் ஸ்ரீனிவாசன் துவங்கி வைத்தார். முன்னதாக நந்தினி சீனிவாசன் முன்னிலையில்,சாகுபுரம் மகளிர் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நிறைவாக சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா, டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் உதவி தலைவர் சுரேஷ் உட்படபலர் கலந்து கொண்டனர்.