இமயமலையிலுள்ள எவரெஸ்டின் உச்சிக்கு ஏற முயன்று பல முறை தோல்வியுற்றவர் டென்சிங் நார்கே. ஒரு நாள் சிகரத்தை பார்த்து‘‘ உன் வளர்ச்சி இவ்வளவு தான். ஆனால் எனக்கோ இனிமேல் தான் வளர்ச்சி உள்ளது’’ என சொன்ன அவர் அடுத்த முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்தார். எந்த செயலையும் தொடர்ந்து முயன்றால் வெற்றியே.