* பெரியவருக்கு ஒருவர் செய்யும் பணிவிடையால் அவரது ஆயுள் நீடிக்கும் என்பது தேவரகசியம். * கல்வியில்லாத செல்வமும் கற்பில்லாத அழகும் கடுகளவேனும் பிரகாசிக்காது. * பள்ளிக்கூட கதவை திறப்பவர்கள், பல சிறைச்சாலை கதவை மூடுகிறார்கள். * சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வெற்றி நிச்சயம். * உள்ளம் பசுமையாக இருக்க வேண்டுமானால் உற்சாகமாக இருங்கள். * பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். கேட்பதை அதிகப்படுத்துங்கள். உங்களின் செயல் குறிக்கோளை அடையும். * கூச்சப்படுபவர்கள் மேடைக்கு வர மாட்டார்கள். * பொறுமையை விட சிறந்த அட்சய பாத்திரம் வேறு இல்லை. – பொன்மொழிகள்.