அங்கம் தெரியும்படி பீரவிணா உடை அணிவதை அவளது தாய் விரும்பவில்லை. இவளை பார்த்து மற்றவரும் பின்பற்றுவார்களே என நினைத்த அவருக்கு யோசனை ஒன்று தோன்றியது. அந்த சமயத்தில் அம்மா! நாளை கல்லுாரியில் சுற்றுலா செல்கிறார்கள். நானும் போகிறேன் பணம் தா என கேட்டாள் மகள். சரி அப்பாவிடம் வாங்கி தருகிறேன் என சொன்னவர்,‘‘மகளிடம் நவரத்தினங்களை பற்றி சொல்லேன்’’ என கேட்டார். மகளோ தங்கம், முத்து, பவளம், வைரம் என வரிசைப்படுத்தினாள். பின்னர், கடலின் ஆழத்தில் முத்துவும் பூமியில் தங்கமும் கிடைக்கிறது. அதை தேடித்தான் எடுக்க வேண்டும் என சொன்னாள். அது போலத்தான் நீயும் என அம்மா சொன்ன போது அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. இனிமேல் இப்படி உடையணிய மாட்டேன் என சொன்னாள் மகள். யாராக இருந்தாலும் எதை சொன்னாலும் கனிவாக சொல்லுங்கள். புரிந்து கொள்வார்கள் என்கிறது பைபிள்.