நபிகள் நாயகம் இளமை காலத்தில் மற்ற குழந்தைகளுடன் விளையாடாமல், தனிமையில் இருப்பது வழக்கம். ஒரு சமயம் தங்களுடன் விளையாட வருமாறு சில குழந்தைகள் அழைத்தனர். அதற்கு அவர், ‘‘மனிதன் மேலான விஷயத்திற்காகப் படைக்கப்பட்டிருக்கிறான். விளையாட்டு விஷயங்களில் ஈடுபடுவதற்காகப் படைக்கப்படவில்லை’’ எனக் கூறி மறுத்துவிட்டார்.