‘பேசுவதற்கு முன் யோசி. யோசிப்பதை எல்லாம் பேசிவிடாதே’ என பெரியவர்கள் சொல்வர். எப்படி பேச வேண்டும் என யார் கற்றுக் கொள்கிறார்களோ, அவர் வெற்றியாளர்தான். கீழ்க்கண்ட பண்பு அவர்களிடம் இருக்கும். * கோபத்தில் வார்த்தைகளை விடாமல், மனதை கட்டுப்படுத்துவார். * வருத்தத்தில் இருப்பவர்களுக்கு, ஆறுதலான வார்த்தைகளை சொல்வார். * எது உண்மையோ, அதை உள்ளபடியே கூறுவார். * தேவையில்லாமல் பேசி அவர்களின் மதிப்பை குறைத்துக் கொள்ளமாட்டார். * பிறர் மனம் புண்படாமல், அன்பாகப் பேசுவார். * உரையாடும் போது எதிரே உள்ளவர் மட்டும் கேட்கும்படி பேசுவார்.