சிதம்பரம்: சிதம்பரம் தில்லை காளி கோவிலில் நேற்று உண்டியல் எண்ணப்பட்டது. இதில் 9 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. சிதம்பரம் தில்லை காளி கோவிலில் நேற்று பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல் காணிக்கை எடுத்து எண்ணும் பணி நடந்தது. கோவிலில் உள்ள 5 உண்டியலில் உள்ள காணிக்கைகள் மொத்தமாக எடுக்கப்பட்டு கோவில் வளாகத்தில் எண்ணப்பட்டது. கடலுார் உதவி ஆணையர் சந்திரம் தலைமையில் செயல் அலுவலர் சரண்யா, சிதம்பரம் சரக ஆய்வாளர் நரசிங்க பெருமாள் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணிகள் நடந்தது. இதில் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இறுதியாக 9 லட்சத்து 43 ஆயிரத்து 130 ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டது. மேலும் 17 கிராம் தங்கம், 221 கிராம் வெள்ளி, சிங்கப்பூர் டாலர் 1, அமெரிக்க டாலர் 1. கனடா டாலர் 20 பெறப்பட்டுள்ளது. கடந்த முறை மார்ச் 28 ம் தேதி உண்டியல் திறக்கப்பட்டது.