பதிவு செய்த நாள்
22
ஜூன்
2023
05:06
சென்னை: வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலில், தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
சென்னை, வியாசர்பாடியில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், ராஜராஜ சோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது .இக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பூஜைகள் உற்சவருக்கு நடந்தன. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது. தேர் திருவிழாவை ஏராளமான பக்தர்கள் குவிந்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர். வியாசர்பாடி, மூர்த்திங்கர் தெரு, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, முத்து தெரு வழியாக சென்ற தேர், மீண்டும் கோவிலை வந்தடைந்தது.பக்தர்கள் வழிநெடுகிலும் ஆரத்தி எடுத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர். சென்னையின் பல்வேறு பகுதியில் இருந்தும், தேர் திருவிழாவை காண திரளான பக்தர்கள் குவிந்தனர். திருத்தேரோட்டத்தின் போது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.