காளஹஸ்தி கங்கை அம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2023 06:06
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், ஸ்ரீ காளஹஸ்தி அடுத்துள்ள பானகல் (பகுதியில்) கங்கை அம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கங்கை அம்மன் திருவிழாவை ஒட்டி அம்மனை சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.பானகல் கங்கை அம்மன் கோயில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததை தொடர்ந்து பானகல் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே அம்மனுக்கு பொங்கல் இட்டும், கோழி ஆடு போன்ற விலங்குகளை பலி கொடுத்தும் மாவிளக்கு ஏற்றி தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பானகல் கங்கை அம்மன் கோயில் பூதலப்பட்டு-நாயுடு பேட்டை தேசிய நெடுஞ் சாலை ஓரத்தில் அமைந்திருப்பதால் ஸ்ரீகாளஹஸ்தி நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு வாகன போக்குவரத்தையும் சீர்படுத்தினர். இந்நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் பானகல் கங்கை அம்மன் திருவிழாவிற்கு கங்கை அம்மனு க்கு சிவன் கோயில் சார்பில் சாரே பூஜை பொருட்கள் மற்றும் பட்டு வஸ்திரங்களை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு தலைமையில் திருப்பதி எம். எல் .சி. டாக்டர் .சிப்பாய் சுப்ரமணியம் வழங்கினர். முன்னதாக பொன்னாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து மங்கள வாத்தியங்கள் மேல தாளங்களுடன் ஊர்வலமாக பூஜை பொருட்களை தலைமீது சுமந்துச் சென்று கங்கை அம்மனுக்கு சாரே சமர்ப்பித்தனர்.
இது குறித்து அஞ்சூரு .தாரக சீனிவாசலு பேசுகையில்.. எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி அறிவுரையின் பேரில் ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் பானகல் கங்கை அமரனுக்கு சாரே சமர்ப்பித்தல் நடைபெற்றதாகவும். இதே போல் தொடர்ந்து வழக்கமாக நடைபெறும் என்றார். ஸ்ரீ காளஹஸ்தி தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் திருவிழாவின் போதும் தேவஸ்தானம் சார்பில் சாரே சமர்ப்பிக்கப்படும் என்றார்.இந் நிகழ்ச்சியில் சிவன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.